அரையாண்டு விடுமுறை | பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!
அரையாண்டு விடுமுறையையொட்டி பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு வாரவிடுமுறை, தொடர்விடுமுறை, விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்தவகையில் அரையாண்டு விடுமுறையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. தொடர் விடுமுறை எதிரொலியாக, பழனி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன்களில் பழனிக்கு படையெடுத்தனர்.
இதையும் படியுங்கள் : திடீரென பற்றிய ‘தீ’.. மளமளவென எரிந்த கார்!
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் பழனிக்கு வருகை தந்தனர். இதனால் அதிகாலை முதலே அடிவாரம், மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொது. கட்டணம் மற்றும் கட்டளை தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதன்படி குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக கோயிலுக்கு செல்லவும், படிப்பாதை வழியாக இறங்கவும் என கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.