For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 
05:19 PM Jan 08, 2025 IST | Web Editor
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்   அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
Advertisement

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலை காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழவில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.

By-election announcement for Erode East constituency on February 5!

அதன்படி, ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. மேலும், இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கவுள்ளது.

வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20ம் தேதி கடைசி நாளாகும். தொடர்ந்து தேர்தல் நடைமுறைகள் பிப்ரவரி 10ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அரிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த நிலையில், அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் உட்பட ஆங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். இதில் தேர்தல் நடத்தை விதிகள், மீறுபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், தேர்தல் பிரச்சார நடைமுறை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement