For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘அசுரன்’ கன்னட ரீமேக்கில் நடிக்க ஆசை - நடிகர் சிவ்ராஜ்குமார் பேச்சு!

06:38 AM Jan 04, 2024 IST | Jeni
‘அசுரன்’ கன்னட ரீமேக்கில் நடிக்க ஆசை   நடிகர் சிவ்ராஜ்குமார் பேச்சு
Advertisement

‘அசுரன்’ படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாக நடிகர் சிவ்ராஜ்குமார் தெரிவித்துள்ளார். 

Advertisement

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ்,  ஜான் கொக்கன் சுமேஷ் மூர், சிவ்ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  தனுஷின் பிறந்தநாளன்று திரைப்படத்தின் டீசர் வெளியானது. படத்தின் டீசர் மற்றும்  பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

இத்திரைப்படம் ஜனவரி 12 அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் முன்-வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மறைந்த நடிகர்கள் விஜயகாந்த் மற்றும் புனித் ராஜ்குமார் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த விழாவிற்கு தனுஷ், பிரியங்கா மோகன், சிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷான், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவ்ராஜ்குமார் பேசியதாவது :

“கதை சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. தனுஷ் படம் என்றால் நான் நடிக்கிறேன் என்றேன். தனுஷை அவரது முதல் படத்தில் இருந்தே எனக்கு பிடிக்கும். தனுஷிடம் நான் என்னை பார்க்கிறேன். தனுஷ் படத்தை பலமுறை பார்த்துள்ளேன்.‌ தனுஷ் அசைவம் சாப்பிடமாட்டார். அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் எனது மனைவி சாம்பார் செய்து கொடுப்பார்கள். அவரது மகன்கள் வருவார்கள், கிரிக்கெட் விளையாடுவார்கள்.

உலக அளவில் சிறந்த நடிகராக தனுஷ் மாறியுள்ளார். இதிலும் அப்படித்தான் நடித்துள்ளார். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ‘ஜெயிலர்’ படத்தில் நடித்த எனக்கு உங்களின் அன்பை கொடுத்ததற்கு நன்றி. அசுரன் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. இளம் வயது மற்றும் வயதான தோற்றம் என நடிப்பது மிகவும் கடினம். அதனை தனுஷ் நன்றாக செய்திருந்தார்.”

இவ்வாறு நடிகர் சிவ்ராஜ்குமார் தெரிவித்தார்.

Tags :
Advertisement