நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து..!
நடிகர் அஜித் குமாரின் கார் பந்தய அணியினர் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24H சீரியஸில் கன்ஸ்ட்ரக்டர் சாம்பியன்ஸ் (constructor champions) பிரிவில் கலந்துகொண்டு 3 ஆம் இடம் பிடித்து அசத்தினர். இதனை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி, நடிகர் அஜித் குமார் அணியினருக்கு வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும்- அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம். 'Ajith Kumar Racing Team' track-இல் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்”
என்று தெரிவித்துள்ளார்.