செருப்பு அணிந்திருந்ததால் உணவகத்தில் அனுமதி மறுப்பு - ஃபிரிடோ சிஇஓ குற்றச்சாட்டு!
செருப்பு அணிந்திருந்ததால் தனக்கும், மற்றொரு நிறுவனத்தின் இணை நிறுவனருக்கும் உணவகத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாக ஃபிரிடோ நிறுவனத்தின் சிஇஓ கணேஷ் சோனாவனே தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள ஜிடி மாலில் நேற்று முன்தினம் விவசாயி ஒருவர் வேஷ்டி கட்டி சென்றதற்காக அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பல தரப்பிலுருந்தும் கண்டனங்கள் எழுந்தன. மேலும் விவசாயிகள் பலர் வேஷ்டி கட்டிக்கொண்டு மாலுக்குள் நுழையும் போராட்டத்தை நடத்தினர். இதனையடுத்து 1 வாரத்திற்கு அந்த மால் செயல்பட கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
True story: Swapnil, Ather Cofounder and I had once gone to a restaurant in Bengaluru and denied entry because of wearing slippers instead of shoes 👞 https://t.co/1abpg8NBsh
— Ganesh Sonawane (@ganeshunwired) July 17, 2024
இந்நிலையில் இதேபோன்ற சம்பவம் தனக்கும், ஏதர் நிறுவன இணை நிறுவனருக்கும் நடந்துள்ளதாக ஃபிரிடோ நிறுவனத்தின் சிஇஓ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். விவசாயி சம்பவத்தை குறிப்பிட்டு, உணவகம் ஒன்றிற்கு சாப்பிட சென்ற இருவரும் ஷூ அணியாததற்காக அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஏதெர் இணை நிறுவனரும், நானும் ஒருமுறை பெங்களூருவில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தோம். அப்போது நாங்கள் ஷுக்களுக்கு பதிலாக செருப்புகளை அணிந்திருந்ததால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் எப்போது, எங்கு நடைபெற்றது என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை. மேலும் அன்று முட்டாள்தனமாக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. நேற்று பகிரப்பட்ட இந்த பதிவு 50 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.