For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#DelhiAssemblyElection | 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி!

05:46 PM Dec 09, 2024 IST | Web Editor
 delhiassemblyelection   2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி
Advertisement

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

Advertisement

டெல்லியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், கடந்த நவ.21ம் தேதி டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. இதில், முதற்கட்டமாக 11 வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, 20 வேட்பாளர்களை கொண்ட 2ம் கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று (டிச.9) வெளியிட்டுள்ளது. அதில் ஜங்புரா தொகுதியில் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா போட்டியிடுகிறார். மேலும் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த பிரபல யு.பி.எஸ்.சி ஆசிரியர் அவத் ஓஜா, பட்பர்கஞ்ச் தொகுதியில் களமிறங்குகிறார். இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. மணீஷ் சிசோடியா என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி சட்டசபை சபாநாயகரும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுமான ராம் நிவாஸ் கோயலுக்கு பதிலாக ஷண்டியை ஆம் ஆத்மி களம் இறக்கியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement