Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு! - டெல்லி ஜல் போர்டு அலுவலகம் சூறையாடப்பட்டது! - பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

07:01 PM Jun 16, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் சத்தர்பூர் பகுதியில் உள்ள டெல்லி ஜல் போர்டு அலுவலகம் அடித்து சேதபடுத்தப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் பாஜகவினர் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

Advertisement

டெல்லியில் கடந்த சில மாதங்களாக கடும் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால்,  பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் எதிர்க்கட்சியாக உள்ள பாஜக இந்த பிரச்னையை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், சத்தர்பூரில் உள்ள டெல்லி ஜல் போர்டு (டிஜேபி) அலுவலகத்தை அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

இது தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. அதில், டெல்லி ஜல் போர்டு அலுவலகத்தில் உடைந்த ஜன்னல் கண்ணாடி மற்றும் மண் பானைகளை காண முடிகிறது. இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தின் மற்றொரு காணொளியை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. அந்த நாச வேலைகளில் ஈடுபட்டவர்கள் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அந்த வீடியோவில் ஒருவர் பாஜக அடையாளத்தை கொண்டிருப்பதாகவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்,  "டெல்லி ஜல் போர்டு அலுவலகத்தை பாஜக தொண்டர்கள் எப்படி உடைக்கிறார்கள் என்பதை பாருங்கள். ஒருபுறம், ஹரியானா பாஜக அரசு, டெல்லியின் உரிமைப் பங்கு தண்ணீரைத் தடுக்கிறது. மறுபுறம், பாஜக டெல்லி மக்களின் சொத்துகளை சேதப்படுத்துகிறது.” என தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக பாஜக தலைவர் ரமேஷ் பிதுரி கூறுகையில் :

“இது இயற்கையானது. மக்கள் கோபமாக இருக்கும்போது எதையும் செய்யமுடியும். அந்த மக்களைக் கட்டுப்படுத்திய பாஜகவினருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். அது அரசு மற்றும் மக்களின் சொத்து. இந்தச் சொத்தை சேதப்படுத்துவதால் எந்தப் பலனும் இல்லை”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் :“பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை ஒத்திவைப்பு!” – பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன்!

இதற்கிடையே டெல்லி நீர் வழங்கல் துறை அமைச்சர் அதிஷி, போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "நாசவேலைகளில் இருந்து பாதுகாக்க தண்ணீர் குழாய்கள் உள்ள முக்கிய பகுதிகளில் போலீஸாரை பணியமர்த்த வேண்டும். தெற்கு டெல்லியில் உள்ள ஒரு முக்கிய பைப்லைனை வேண்டுமென்றே சேதப்படுத்திய சம்பவம், தண்ணீர் பற்றாக்குறையை அதிகப்படுத்தியது"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
AAPbJP GovernmentDelhiDelhi Jal BoardDJB officeharyanainjuredWater Crisis
Advertisement
Next Article