For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லி - அமெரிக்கா விமானம் தாமதம்: ஏர் இந்தியா நிறுவனத்தின்கு நோட்டீஸ்!

10:07 AM Jun 01, 2024 IST | Web Editor
டெல்லி   அமெரிக்கா விமானம் தாமதம்  ஏர் இந்தியா நிறுவனத்தின்கு நோட்டீஸ்
Advertisement

டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான் - ஃபிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் புறப்பாடு,  ஆறு மணி நேர காத்திருப்புக்குப் பிறகு மாற்றப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

Advertisement

டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா (ஏஐ-183) சுமார் 200 பயணிகளுடன் கடந்த 30ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் புறப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், ஆறு மணிநேர காத்திருப்புக்குப் பிறகு இரவு 10 மணியளவில் விமானத்தின் புறப்பாடு மே-31ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இது தொடர்பாக விமானப் பயணிகளில் ஒருவர் கூறுகையில்:

"முதல் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இரவு 7.20 மணியளவில் பயணிகள் அனைவரும் மற்றொரு விமானத்துக்கு மாற்றப்பட்டோம். அந்த விமானத்தில் குளிர்சாதன அமைப்பு செயல்படவில்லை. இதனால் விமானத்தில் இருந்த முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் மயக்கமடைந்தனர்.

இதையடுத்து, பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறி, ஏரோ- பிரிட்ஜில் ஒரு மணிநேரத்துக்கும் மேல் காத்திருந்தனர். அதன்பிறகு, பயணிகள் அனைவரும் விமான நிலையத்துக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். விமானம் முதலில் மே-31ம் தேதி காலை 8 மணியளவில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர், அது பிற்பகல் 3 மணிக்கு மாற்றப்பட்டது. பயணத்தை ரத்து செய்யும் அல்லது மாற்றியமைக்கும் வசதியை செய்து தர விமான நிறுவனம் மறுத்துவிட்டது" என அந்த விமான பயணி தெரிவித்தார்.

இது தொடர்பாக ஏர்-இந்தியா நிறுவனம் கூறியதாவது:

"தாமதம் காரணமாக, விமானப் பணியாளர்கள் பணிநேரத்தைக் கடந்துவிட்டனர் எனவும் விமானம் புறப்பட்டிருந்தாலும் தரையிறங்கும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் இரவுநேரத்தில் சான் ஃபிரான்சிஸ்கோவை அடைந்திருக்கும். மேலும், பயணிகளுக்கு தங்குமிடம் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டது. பயணத்தை ரத்து செய்தவர்களுக்கு பயணக்கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்பட்டது"

இவ்வாறு விமான நிறுவன அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

இதையும் படியுங்கள் : “பாறையில் அமர்ந்து தியானம் செய்தால் விவேகானந்தர் ஆகி விட முடியாது” – திருமாவளவன் பேச்சு

முன்னதாக, இந்தியாவிலிருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் 2வது ஏர் இந்தியா விமானம் கடந்த ஒரே வாரத்தில் தாமதமாகி, மறுநாள் புறப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து கடந்த 24ம் தேதி புறப்பட வேண்டிய விமானம், 25ம் தேதி மாலை புறப்பட்டது. இந்த மாற்றுத்துக்கு முன், பயணிகள் 5 மணிநேரம் விமானத்துக்குள் காத்திருக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது ஏர் இந்தியா விமானங்களின் இந்த தாமதப் புறப்பாடுகள் குறித்து விளக்கமளிக்குமாறு அந்த நிறுவனத்துக்கு பொது விமானப் போக்குவரத்து இயக்குனரகம்  ( டிஜிசிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags :
Advertisement