For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி!

07:31 AM Apr 18, 2024 IST | Web Editor
குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி
Advertisement

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.  

Advertisement

17-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது.  விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெல்லி அணியில் டேவிட் வார்னர் ஆடவில்லை.  'டாஸ்' வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.  குஜராத் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக சாஹா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர்.  சாஹா 10 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கில் 8 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். தமிழக வீரர் சாய் சுதர்சன் 12 ரன்னிலும், அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் 2 ரன்னிலும், அபினவ் மனோகர் 8 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். ராகுல் தெவாதியா 10 ரன்களும் துணை கேப்டன் ரஷித் கான் 24 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

இறுதியாக 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்கள் மட்டுமே எடுத்தது.  டெல்லி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ்குமார் 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, டிரிஸ்டான் ஸ்டப்ஸ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 2 கேட்ச், 2 ஸ்டம்பிங் செய்தது குறிப்பிடத்தக்கது.  இதையடுத்து 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில், அதிகபட்சமாக ஜாக் பிரேசர் மெக்குர்க் 20 ரன்னும், ஷாய் ஹோப் 19 ரன்னும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 16 ரன்னும் எடுத்தனர்.  விக்கெட் கீப்பிங்கில் அசத்திய ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.  3-வது வெற்றியை பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிபட்டியலில் 9-ல் இருந்து 6-வது இடத்துக்கு முன்னேறியது.

Tags :
Advertisement