என்னது இவ்வளவு விலையா? #Delhi -ல் 1 கிலோ பப்பாளி ரூ.2000 விற்பனை! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
டெல்லியில் உள்ள விலை உயர்ந்த மளிகை கடையில் விற்பனையாகும் பொருட்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் வீடியோ பதிவிட்டுள்ளார்.
டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அசாம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளிலும், பல்வேறு விளை நிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விளை பொருள்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இதன் எதிரொலியாக சந்தைகளில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பயனர் ஹம்சா கான் என்பவர் டெல்லியில் உள்ள விலை உயர்ந்த மளிகை கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த காய்கறிகள், பழங்களை போன்ற மளிகை பொருட்களின் விலை குறித்து வீடியோ பதிவு ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள் : சிகாகோவில் 3 நிறுவனங்களுடன் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! – முதலமைச்சர் #MKStalin முன்னிலையில் கையெழுத்து!
மளிகை கடையில் உள்ள பப்பாளிப்பழம் 1கிலோ ரூ. 2000 விற்பனை செய்யப்படுவதாக அந்த வீடியோ பதிவில் அவர் தெரிவித்திருந்தார். அந்த பப்பாளிப்பழம் இட்டாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் ரூ. 2000 த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. பழங்கள் நிறைந்த கூடைகள் ரூ. 7000 த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அந்த கடையில், அழியாத காளான் எனப்படும் ரெய்ஷி காளான் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.