டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் - உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
டெல்லி துணைநிலை ஆளுநருக்கான உள் அதிகாரத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு டெல்லி மாநகராட்சியில் ஆளும் அரசின் அமைச்சரவையின் ஆலோசனையின்றி 10 நியமன உறுப்பினர்களை நியமிக்கும் உரிமைகள் குறித்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு மே 2023 இல் தீர்ப்பை ஒத்திவைத்ததிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. டெல்லி துணைநிலை ஆளுநர் அமைச்சரவை ஆலோசனையின்றி டெல்லி மாநகராட்சிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்யலாம் என உச்சநீதிமன்ற உறுதி செய்துள்ளது.
இதன் மூலம் உச்சநீதிமன்றம் துணைநிலை ஆளுநருக்கு உள் அதிகாரத்தை உறுதி செய்தது. டெல்லி அரசு அல்லது அமைச்சரவை குழு ஆகியவற்றின் ஆலோசனை அல்லது கருத்துக்களை துணை நிலையாளர் கட்டாயமாக கேட்க வேண்டும் என்று அவசியமில்லை என தெரிவித்த உச்சநீதிமன்றம் ஏற்கனவே செய்யப்பட்ட சட்ட திருத்தம் இதை திட்டவட்டமாக கூறுவதாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 15 மாதங்களில், டெல்லியின் உள்கட்டமைப்பு தொடர்பாக ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது