தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லி - லண்டன் ஏர் இந்தியா விமானம் ரத்து!
தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லி - லண்டன் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
09:00 PM Jul 31, 2025 IST | Web Editor
Advertisement
ஏர் இந்தியா Boeing 787-9 ரக விமானம் ஒன்று, இன்று டெல்லியில் இருந்து லண்டன் நகரத்துக்குச் செல்ல இருந்தது .அப்போது, விமானிகள் விமானம் புறப்படும் முன் செய்ய வேண்டிய வழக்கமான சோதனைகளின் மேற்கொண்டனர். அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
Advertisement
இதனை தொடர்ந்து அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பயணிகள் அனைவரும் விமானத்தி இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் பயணிகள் அனைவருக்கும் மற்றொரு விமானம் மூலம் லண்டன் செல்வதற்கான நடவடிக்கைகள் ஏர் இந்தியா நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதில் 260 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.