டெல்லி ஜே.என்.யூ மாணவர் பெருமன்ற தேர்தல் : இடதுசாரிகள் கூட்டணி அபார வெற்றி - போட்டியிட்ட நான்கிலும் ABVP தோல்வி!
டெல்லி ஜே.என்.யூ மாணவர் பெருமன்ற தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அபார வெற்றி பெற்றது. போட்டியிட்ட நான்கிலும் ABVP அமைப்பு தோல்வியை தழுவியது.
இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் மட்டுமே கல்வி நிலையங்களில் மாணவர் பெருமன்ற தேர்தல்கள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சொற்ப எண்ணிக்கையில் சில கல்லூரிகளில் மட்டுமே நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள பல்கலைகழகங்களிலேயே ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் நடைபெறும் மாணவர் பெருமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஒரு மாநில தேர்தலை போன்று ஜே.என்.யு பல்கலைக்கழக தேர்தல் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளுடன் நடைபெற்றது. மார்ச் 22 ஆம் தேதி ஜே.என்.யு மாணவர் பெருமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக எண்ணப்பட்டு நேற்று மாலை முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
ஏபிவிபி அமைப்பு போட்டியிட்ட நான்கிலும் தோல்வியை தழுவியது. இந்த தேர்தலில் 7ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் வாக்களித்துள்ளனர்.