For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லி தூதரகம் தாக்குதல் எதிரொலி - இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு கட்டுப்பாடு..!

07:49 AM Dec 28, 2023 IST | Web Editor
டெல்லி தூதரகம் தாக்குதல் எதிரொலி   இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு கட்டுப்பாடு
Advertisement

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதகரம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்கள் கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க கோரி அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

இஸ்ரேல் – காஸா  இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போரானது இதுவரையிலும் தொடர்ந்து வருகிறது.  இஸ்ரேல், காஸா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி 20,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.  இத்தாக்குதல்களில் மருத்துவமனைகளும் குறிவைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.  அதற்கு பதிலளித்த இஸ்ரேல்,  காஸா மருத்துவனைகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வருவதாக கூறியது.

இந்நிலையில் கடந்த டிச.26ம் தேதி டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மிகப்பெரிய வெடி சத்தம் கேட்டது. இச்சம்பவம் தொடர்பாக டெல்லி மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்திய போது, இஸ்ரேல் தூதகரத்திற்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று சிக்கியது. மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த வெடிவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும் இஸ்ரேல் தூதரகம் தெரிவித்தது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்கள் கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க கோரி அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிப்பதால், இஸ்ரேலியர்கள் கவனத்துடன் இருக்குமாறும் இஸ்ரேலிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement