லக்னோவை வீழ்த்தியது டெல்லி - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, லக்னோ, குஜராத், கொல்கத்தா ஆகிய பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 55 ரன்கள் விளாசினார்.இதனைத் தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்து அசத்தல் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஃபிரேசர்-மெக்கர்க் 55 ரன்கள் விளாசினார். 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய டெல்லி அணியின் குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படியுங்கள் : ‘வடக்கன்’ திரைப்படம் மே மாதம் வெளியீடு – படக்குழு அறிவிப்பு!
இவ்வாறு லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.