Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜாமின் கேட்டு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

08:36 PM Jun 23, 2024 IST | Web Editor
Advertisement

மதுபான கொள்கை வழக்கில் ஜாமினை நிறுத்தி வைத்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது

Advertisement

மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.  இதையடுத்து கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 20ம் தேதி ஜாமீன் வழங்கிய நிலையில்,  அமலாக்கத்துறை அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது.  இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம்,  கெஜ்ரிவாலின் ஜாமீனை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து கடந்த 21ம் தேதி வெளியேறுவதாக இருந்த நிலையில்,  இந்த திடீர் உத்தரவு வந்தது. கடந்த 20ம் தேதி விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீன் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை 48 மணிநேரம் அவகாசம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : “கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்நிலையில், மதுபான கொள்கை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Tags :
appealArvind KejriwalCHIEF MINISTERDelhiSupreme court
Advertisement
Next Article