Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம்: மத்திய அமைச்சர்களுடன் 4ம் கட்ட பேச்சுவார்த்தை!

07:42 PM Feb 18, 2024 IST | Web Editor
Advertisement

விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டம் 6வது நாளாக தொடரும் நிலையில், இன்று மத்திய அரசுடன் 4வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

Advertisement

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் நேற்று (பிப்.13) ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலையில் அதாவது பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சம்பு என்ற இடத்தில் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்று கொண்டிருந்த விவசாயிகளை போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசார் தடையை உடைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறினர்.

இதனிடையே விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசுடன் கடந்த 8, 12 மற்றும் 16-ம் தேதிகளில் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில், மத்திய அரசுடன் தங்களது கோரிக்கைகள் குறித்து விவசாய சங்கங்கள் இன்று (பிப். 18) 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். மத்திய அரசுடனான பேச்சு வார்த்தையை முன்னிட்டு பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் விவசாயிகள் தங்கி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 6-வது நாளை எட்டியுள்ளது.

சண்டிகரில் இன்று நடக்கும் நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட டெல்லியில் இருந்து பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா மற்றும் நித்யானந்த் ராய் ஆகிய மூன்று மத்திய அமைச்சர்களும் சண்டிகர் புறப்பட்டு சென்றனர். விவசாயிகள் அமைப்பினருடன் பேச்சுவார்த்தையானது இன்றிரவு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் பாட்டியாலா, சங்ரூர், ஃப்தேகர் சாஹிப் உள்ளிட்ட பஞ்சாப்பின் சில மாவட்டங்களில் இணையசேவைக்கானத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விவசாயிகளின் டெல்லி சலோ பேரணியை முன்னிட்டு பிப்.12 முதல் 16-ம் தேதி வரை தடை செய்யப்பட்டிருந்தது. ஹரியாணா அரசும் டெல்லி சலோ பேரணியை முன்னிட்டு மாநிலத்தின் ஆம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், ஃபதேகாபாத் மற்றும் சிர்ஸா மாவட்டங்களில் நாளை (பிப்.19) வரை இணைய சேவை, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்ப தடை செய்யப்பட்டுள்ளது.

Tags :
DelhiDelhi ChalofarmersharyanaMega MarchNews7Tamilnews7TamilUpdatesPoliceProtestsecurity
Advertisement
Next Article