For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மோடி-அமித்ஷா-அம்பானி கூட்டணி பொறுப்பேற்க வேண்டும் - திருமாவளவன்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்- 'மோடி-அமித்ஷா-அம்பானி' கூட்டணி இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
10:18 AM Nov 11, 2025 IST | Web Editor
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்- 'மோடி-அமித்ஷா-அம்பானி' கூட்டணி இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்   மோடி அமித்ஷா அம்பானி கூட்டணி பொறுப்பேற்க வேண்டும்   திருமாவளவன்
Advertisement

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடித்து பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Advertisement

நாட்டின் தலைநகரிலேயே, அதுவும் அதிஉயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட பகுதியிலேயே காரில் வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு எப்படி ஊடுருவமுடிந்தது? உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள 'மோடி-அமித்ஷா-அம்பானி' கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்கவேண்டும்?

பீகார் சட்டமன்றப் பொதுத்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப பதிவுக்கு முதல் நாளில் இப்படி நடந்திருப்பதால் இதனை அத்தேர்லோடு முடிச்சுப்போட்டுப் பார்க்கும் நிலை உருவாகிறது. ஏற்கனவே இப்படிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தேர்தல் காலங்களில் நடந்தேறியுள்ளன.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு விசிகசாரபில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய கொடூரப் போக்குகளை விசிக மிக வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகள் ஒருவரும் தப்பிவிடக் கூடாது. அனைவரையும் கைது செய்ய வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement