டெல்லி கேபிடல்ஸ் அபாரமான பந்துவீச்சில் 89 ரன்களில் சுருண்ட குஜராத் அணி!
டெல்லி கேபிடல்ஸ் அபாரமான பந்துவீச்சில் தாக்குபிடிக்க முடியாமல் 89 ரன்களில் சுருண்டது பலமான குஜராத் அணி.
சொந்த மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் டைட்டன்ஸ் 89 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதையடுத்து 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக சாஹா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். சாஹா 10 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கில் 8 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
தமிழக வீரர் சாய் சுதர்சன் 12 ரன்னிலும், அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் 2 ரன்னிலும், அபினவ் மனோகர் 8 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். ராகுல் தெவாதியா 10 ரன்களும் துணை கேப்டன் ரஷித் கான் 24 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.
Wrapped 🆙 by Mukesh Kumar 🙌
He ends his spell with 3️⃣ wickets 👏👏
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #GTvDC pic.twitter.com/sT9tWxddLa
— IndianPremierLeague (@IPL) April 17, 2024
இறுதியாக 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர். இன்று டெல்லி அணியின் பந்து வீச்சு பாராட்டும் வகையில் அமைந்தது. அதிகபட்சமாக முகேஷ் குமார் 2.3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.