டெல்லி விமான நிலைய மேற்கூரை விபத்து - நியூஸ்7 தமிழின் நேரடி ரிப்போர்ட்...
டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
டெல்லியில் இன்று காலையிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. பல மணி நேரமாக பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் பல குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் வாட்டி வதைத்த வெயில் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டில் மக்கள் தவித்த நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் தண்ணீர் தட்டுப்பாடு தீரும் என்கிறபோதிலும் அடுத்த வீடுகள் மற்றும் குடியிறுப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் இக்கட்டான சூழலில் தாங்கள் மாட்டிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
இன்று பெய்த தொடர் கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை திடீரென இடிந்து விழந்தது. இந்த விபத்தில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், விமான நிலையத்தில் விபத்து நிகழ்ந்த பகுதி மூடப்பட்டுள்ளது. விமானப் புறப்பாடு மற்றும் தரையிறங்குவது மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து அங்கிருந்து நமது சிறப்பு செய்தியாளர் வசந்தி சேகரித்த களநிலவரங்களை முழுமையாக காண: