Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“டெல்லி விமான நிலையம் முதல் அயோத்தி ராமர் கோயில் வரை பாஜக கட்டுமானங்கள் அனைத்திலும் ஊழல்!” - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

09:59 PM Jun 28, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி விமான நிலையம் முதல்  அயோத்தி ராமர் கோயில் வரை பாஜக கட்டுமானங்கள் அனைத்திலும் ஊழல் நடந்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

Advertisement

டெல்லியில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 4 மணி நேரமாக பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் பல குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் வாட்டி வதைத்த வெயில் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டில் மக்கள் தவித்த நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் தண்ணீர் தட்டுப்பாடு தீரும் என்கிறபோதிலும் வீடுகள் மற்றும் குடியிறுப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் இக்கட்டான சூழலில் தாங்கள் மாட்டிக் கொண்டதாக சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழந்தது.  இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால், விமான நிலையத்தில் விபத்து நிகழ்ந்த பகுதி மூடப்பட்டுள்ளது.  விமானப் புறப்பாடு மற்றும் தரையிறங்குவது மதியம் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்,  நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்ததாகக் கூறப்படும் கட்டமைப்புகளை பட்டியலிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது,  முதல் மழைக்கே அயோத்தி ராமர் கோயிலின் கருவறைக்குள் மழைநீர் நுழைந்தது.  இது கோயிலின் தலைமை பூசாரிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதே போன்று அடல் சேது பாலம் போன்ற பிற திட்டங்களின் நிலையையும் சஞ்சய் சிங் குறிப்பிட்டதோடு டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பாஜக ஆட்சியில் தொடரும் ஊழல்களை சுட்டிக்காட்டுகின்றன என்று சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags :
Aam Aadmi PartyAyodhyaBJPDelhi airportDelhi Rains
Advertisement
Next Article