Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Delhi | இன்று 54-ஆவது #GST கவுன்சில் கூட்டம்!

06:39 AM Sep 09, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லியில் இன்று 54-ஆவது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.

Advertisement

டெல்லியில் 54-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று (செப். 9) நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் காப்பீட்டு தவணைக் கட்டணத்துக்கு (ப்ரீமியம்) விதிக்கப்படும் ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி விகித சீரமைப்பு தொடர்பான அமைச்சர்கள் குழுவின் (ஜிஓஎம்) பரிந்துரைகள், இணைய விளையாட்டுகள் தொடர்பான ஜிஎஸ்டி நிலவர அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலில், மாநில அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பாக ஆயுள் காப்பீடு தவணைக் கட்டணத்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களித்தல், மருத்துவக் காப்பீடு தவணைக் கட்டணம் மீதான ஜிஎஸ்டியை குறைத்தல் அல்லது அந்த ஜிஎஸ்டியை செலுத்துவதில் இருந்து மூத்த குடிமக்கள் போன்றவர்களுக்கு விலக்களித்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு தவணைக் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
BJPGSTloksabhaNews7TamilNirmala sitaramanOnline Transaction
Advertisement
Next Article