For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Delhi | Smart phone வாங்கியதற்கு Treat கொடுக்காததால் 15 வயது சிறுவன் கொலை | 3 சிறுவர்கள் கைது!

04:23 PM Sep 24, 2024 IST | Web Editor
 delhi   smart phone வாங்கியதற்கு treat கொடுக்காததால் 15 வயது சிறுவன் கொலை   3 சிறுவர்கள் கைது
Advertisement

கிழக்கு டெல்லியின் ஷகர்பூரில் புதிய ஸ்மார்ட்போன் வாங்கியதற்காக டிரீட் கொடுக்க மறுத்ததால், 3 சிறுவர்கள் தங்கள் 16 வயது நண்பரை கத்தியால் குத்திக் கொன்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கிழக்கு டெல்லி மாகாணம் ஷகர்பூர் பகுதியில் நேற்று (செப். 23) இரவு 7.15 மணியளவில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் ரத்தக் கறைகளை கண்ட போலீஸார் அதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது தான் ஒரு திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஷகர்பூரில் 16 வயது நிரம்பிய 9ம் வகுப்பு படிக்கும் சிறுவன் சச்சின் புதியதாக ஸ்மார்ட்போன் வாங்கியுள்ளார். சச்சின் ஸ்மார்ட்போன் வாங்கியதற்கு தனது 3 நண்பர்கள் டிரீட் கேட்டுள்ளனர். அவர்களுக்கு சச்சின் டிரீட் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 நண்பர்கள் சச்சினை கத்தியால் குத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய 3 சிறுவர்களும் 9ம் வகுப்பு மாணவர்கள் எனவும், அவர்களுக்கும் 16 வயது நிரம்பியவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சச்சின் LNJP மருத்துவமனைக்கு உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சச்சினி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பேசிய காவல்துறை துணை ஆணையர் (கிழக்கு) அபூர்வ குப்தா, “பாதிக்கப்பட்ட சச்சின் என்ற சிறுவன் ஷகர்பூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். சச்சின் முதுகில் இரண்டு கத்தியால் குத்தப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சச்சினும் அவரது நண்பர் ஒருவரும் மொபைல் போனை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​3 சிறுவர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. மொபைல் வாங்கியதை கொண்டாட 3 சிறுவர்களும் டிரீட் கேட்டுள்ளனர். ஆனால் சச்சின் மறுத்துவிட்டதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது கொலைக்கு வழிவகுத்துள்ளது.

ஷகர்பூர் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் பிரிவு 103 (1) மற்றும் 3 (5) ஆகியவற்றின் கீழ் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவரும் இன்று (செப். 24) கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளை அடையாளம் காண போலீசார் சிசிடிவி காட்சிகளை பயன்படுத்தியுள்ளனர்” இவ்வாறு அபூர்வ குப்தா தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement