For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரூ.1.45 லட்சம் கோடியில் ராணுவ தளவாடம் - Defence Acquisition Council ஒப்புதல்!

07:59 AM Sep 04, 2024 IST | Web Editor
ரூ 1 45 லட்சம் கோடியில் ராணுவ தளவாடம்   defence acquisition council ஒப்புதல்
Advertisement

ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

பாதுகாப்பு படைகளுக்கு ரூ.1,44,716 கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ராணுவத்தின் டேங்க் படைப்பிரிவை நவீனமயமாக்க, எதிர்காலத் தேவைக்கான நவீன டேங்குகள் வாங்கப்பட உள்ளதாகவும், வான் பாதுகாப்பு ரேடார்கள், கவச வாகனங்களும் வாங்கப்படவுள்ளதாகவும், இந்திய கடலோர காவல் படைக்கு டோர்னியர் ரக விமானம், விரைவு ரோந்து படகுகள் வாங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் விமானங்களில் பொதுவாக அதன் வாழ்நாளில் 3 முறை இன்ஜின்கள் மாற்றப்படும். இந்திய விமானப்படையில் தற்போது ரஷ்ய தயாரிப்பில் 259 சுகோய் போர் விமானங்கள் உள்ளன. இதனால் சுகோய் போர் விமானங்களுக்கு 240 புதிய ஏரோ இன்ஜின்களை ரூ.26,000 கோடிக்கு வாங்க பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு நேற்று (செப். 3) ஒப்புதல் அளித்துள்ளது. இன்ஜின்களின் சில பாகங்கள் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பாதுகாப்பு துறையின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் (எச்ஏஎல்) தயாரிக்கப்படவுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் இன்ஜின்களில் 54% உள்நாட்டு தயாரிப்பு பாகங்கள் இடம்பெறும்.

விமானப்படையில் கடந்த சில ஆண்டுகளாக விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானங்களுக்கு மாற்றாக 12 புதிய சுகோய் போர் விமானங்களை ரூ.11,500 கோடி மதிப்பில் வாங்கவும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. விமானப்படையில் சுகோய் விமானப் படைப்பிரிவுகள் முக்கியமானவைாக உள்ளன. இவற்றுக்கு புதிய இன்ஜின்கள் பொருத்துவதன் மூலம், நாட்டின் பாதுகாப்பு தயார் நிலை வலுவடையும். விமானப்படையில் 60 மிக்-29 ரக விமானங்களுக்கும் புதிய இன்ஜின்களை ரூ.5,300 கோடி மதிப்பில் வாங்குவதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் வழங்கியது. இந்த இன்ஜின்களை ரஷ்யா ஒத்துழைப்புடன் எச்ஏஎல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

மேலும், டோர்னியர்-228 விமானங்கள், கடினமான வானிலையில் உயர் செயல்பாட்டு அம்சங்களைக் கொண்ட அடுத்த தலைமுறை விரைவு ரோந்து கப்பல்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம், மேம்பட்ட நீண்ட தூர செயல்பாடுகளுடன் கூடிய அடுத்த தலைமுறை கடல் ரோந்து கப்பல்கள், கண்காணிப்பு, ரோந்து, கடல் மண்டலம், தேடல், மீட்பு மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement