பெரியார் குறித்து அவதூறு பேச்சு - சீமான் வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு!
தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து, நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என மே 17 இயக்கத்தினர், தந்தை பெரியார் திக உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. சொன்னவாரே பெரியார் இயக்கத்தை சேர்ந்த பலரும் பதாகைகளை ஏந்தி சீமானின் வீட்டின் முன்பு இன்று குவிந்துள்ளனர்.
மேலும் சீமான் வீடு முற்றுகையிடப்படும் என்ற அறிவிப்பை அடுத்து அவரது இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் நள்ளிரவு முதலே குவிந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் முன்பு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சர்ச்சை பேச்சுக்கான ஆதாரத்தை எங்கு காண்பிக்க வேண்டுமோ அங்கு வெளிப்படுத்துவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.