தீப கார்த்திகை - ஜெட் வேகத்தில் உயர்ந்த பூக்களின் விலை!
வரத்துக் குறைவு மற்றும் கார்த்திகை தீபத்தை ஒட்டி பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே மழைப்பொழிவு மற்றும் பனி காரணமாக பூக்களின் வரத்து குறைந்து, விலையானது உயர்ந்துள்ளது. இதனிடையே திருக் கார்த்திகை தீபத்தை ஒட்டியும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
திருக்கார்த்திகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ 2000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 1000 ரூபாய்க்கும், முல்லை பூ 800 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1500 ரூபாய்க்கும், சாமந்திப்பூ 120 ரூபாய்க்கும், சம்மங்கி 120 ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 500 ரூபாய்க்கும், அரளிப்பூ 400 ரூபாய்க்கும், ரோஸ் பெரிய மாலை 250, சிறியது 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சம்பங்கி பெரிய மாலை ரூ.250க்கும், சிறியது 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. செண்டுபூ மாலை பெரியது 1500 ரூபாய்க்கும், வெட்டிவேர் மாலை 1500 முதல் 2500 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது.