Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்” - #IMD தகவல்!

09:10 AM Oct 22, 2024 IST | Web Editor
Advertisement

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,

“வங்கக்கடலில் நேற்று (அக். 21) உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக கிழக்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து காலை 5:30 மணியளவில் நிலை கொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒடிசாவின் பாரதீப் பகுதிக்கு தென்கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்காளத்தின் சாகர் தீவுக்கு தெற்கு தென்கிழக்கு 770 கிலோ மீட்டர் தொலைவிலும், பங்களாதேஷ் கேபுபுரா பகுதிக்கு தெற்கு தென்கிழக்கு 740 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

https://twitter.com/Indiametdept/status/1848344416861483094

இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து நாளை (அக். 23) புயலாக மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவாகும். மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நாளை மறுநாள் (அக். 24) காலை வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் பகுதியிலும், பூரி மற்றும் சாகர் தீவுக்கு இடையே நாளை மறுநாள் இரவு மற்றும் 25-ம் தேதி காலையில் 100 முதல் 120 கிலோமீட்டர் வரை காற்றின் வேகத்தோடு கரையை கடக்கும்” இவ்வாறூ இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Alertbay of bengalCycloneDanaDepressionHeavy rainMeteorological DepartmentNews7TamilRainTn Rains
Advertisement
Next Article