#Tirupati கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற புது மாப்பிள்ளைக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தனி அருகில் உள்ள கேசரம் கிராமத்தை சேர்ந்த நரேஷ், சுவாதி ஆகியோருக்கு
கடந்த ஆக. 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. நரேஷ் பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இந்த புதுமணத் தம்பதிகள் திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்காக திருப்பதியில் இருந்து பாதயாத்திரையாக நடந்து சென்றனர்.
நடைபாதையில் உள்ள 2350வது படிக்கட்டில் ஏறியபோது புது மாப்பிள்ளை நரேஷுக்கு
திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. அப்போது நெஞ்சை கையில் பிடித்து கொண்டு கீழே சரிந்த நரேஷ் சற்று நேரம் துடித்து கொண்டிருந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு செய்து தகவல் அளித்தனர்.
இதையும் படியுங்கள் :வர்த்தக ரகசியங்களை திருடியதாக #Infosys மீது காக்னிஸன்ட் வழக்கு!
இதையடுத்து, விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மயங்கி சரிந்து கிடந்த நரேஷை ஆம்புலன்சில் ஏற்றி திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். திருமணம் நடைபெற்று 15 நாட்கள் ஆவதற்கு முன்னதாகவே திருப்பதி கோயிலுக்கு சென்ற புது மாப்பிள்ளைக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.