For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#DearBrother இணையத்தில் வைரலாகும் மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி X தள உரையாடல்!

07:31 PM Sep 04, 2024 IST | Web Editor
 dearbrother இணையத்தில் வைரலாகும் மு க ஸ்டாலின்   ராகுல் காந்தி x தள உரையாடல்
Advertisement

சிகாகோவில் பாட்டுப்பாடி கொண்டே சைக்கிள் பயணம் மேற்கொண்டது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி இடையே ட்விட்டர் (X) தளத்தில் நடைபெற்ற உரையாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Advertisement

சென்னையில் எப்போது நாம் ஒன்றாக சைக்கிள் ஓட்டுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். இந்நிலையில், பணி ஒருபுறம் இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோவில், ஒரு மாலைநேரப் பொழுதில், முதலமைச்சர் பாட்டுப்பாடி கொண்டே சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விடியோவைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, சகோதரரே, சென்னையில் நாம் இருவரும் ஒன்றாக எப்போது சைக்கிள் ஓட்டுவோம் என்று கேட்டார்.

இந்த நிலையில், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், ஒன்றாக சைக்கிளில் பயணித்து சென்னையை ஆராய்வோம் எனவும் என் வீட்டில் இனிப்புகளுடன் ஒரு சுவையான தென்னிந்திய மதிய உணவை அனுபவிப்போம் எனவும் தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், ட்விட்டர் (X) தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி இடையே நடைபெற்ற உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Tags :
Advertisement