For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"Dear Indian Army.. Big Salute..." - கேரளாவை சேர்ந்த 3ம் வகுப்பு சிறுவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்!

10:30 AM Aug 04, 2024 IST | Web Editor
 dear indian army   big salute       கேரளாவை சேர்ந்த 3ம் வகுப்பு சிறுவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்
Advertisement

கேரளாவை சேர்ந்த சிறுவன் இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை இந்திய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் இருந்த வீடுகளும் மண்ணால் மூடப்பட்டன. 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர். சுமார் 1000த்திற்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து 6வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவக் குழுக்கள் 500க்கும் மேற்பட்ட வீரர்களுடன், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்கள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் கேரளாவைச் சேர்த்த 3ம் வகுப்பு மாணவர் இந்திய ராணுவத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பள்ளி மாணவரான ரையான் தனது கடிதத்தில்,

“அன்புள்ள இந்திய ராணுவமே, எனது அன்புக்குரிய வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி, பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை நீங்கள் மீட்பதைக் கண்டு நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன். நீங்கள் பிஸ்கட் சாப்பிடும் வீடியோவைப் பார்த்தேன். அது உங்கள் பசியைப் போக்கியிருக்கும் என நம்புகிறேன். நீங்கள் ஒரு பாலம் கட்டிய காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. நானும் ஒரு நாள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து என் தேசத்தை பாதுகாக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்திய ராணுவம் இந்தக் கடிதத்தை தெற்கு கமாண்டின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "இளம் வீரருக்கு நன்றி" என்று அந்தப் பதிவிட்டுள்ளது.

"உங்கள் இதயப்பூர்வமான வார்த்தைகள் ஆழமாக எங்கள் மனத்தை தொடுகின்றன. துன்ப காலங்களில், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக செயல்படுகிறோம் என்பதை உங்கள் கடிதம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உங்களைப் போன்ற ஹீரோக்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய எங்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள். நீங்கள் ராணுவ சீருடை அணியும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இணைந்து நிற்போம், தேசத்தைப் பெருமைப்படுத்துவோம். உங்கள் தைரியத்திற்கும் உத்வேகத்திற்கும் நன்றி" என்று இந்திர ராணுவம் பதில் அளித்துள்ளது.

Tags :
Advertisement