For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தவெகவின் திராவிடமும், தமிழ் தேசியமும் என்ற கொள்கை நாதக கொள்கைக்கு எதிரானது” - #Seeman பேட்டி!

06:48 AM Oct 28, 2024 IST | Web Editor
“தவெகவின் திராவிடமும்  தமிழ் தேசியமும் என்ற கொள்கை நாதக கொள்கைக்கு எதிரானது”    seeman பேட்டி
Advertisement

தவெக தலைவர் விஜய் திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என கூறியுள்ளதாகவும், இது நாதக கொள்கைக்கு நேர் எதிரானது எனவும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Advertisement

மதுரையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான்,

“வெளிநாடுகளில் உள்ளது போல மழைநீர் வடிகால் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். மழைநீர் வெளியேற்றுவதில் ஆட்சியாளர்களின் கவனக்குறைவிற்கு இயற்கையை குறை சொல்லக்கூடாது. விஜய் கோபத்துடன் அரசியலுக்கு வந்துள்ளது போலவே நான் 13 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்தேன். விஜய் திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என கூறியுள்ளார். இது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிட கொள்கை வேறு, தமிழ் தேசிய கொள்கை வேறு.

இது என் நாடு, என் மக்கள். இங்கு நடைபெறும் அரசியல் தமிழ்தேச அரசியல், தெலுங்கு தேசம் என கட்சி தொடங்கும் போது எதிர்ப்புகள் வரவில்லை. நாங்கள் தமிழ் தேசம் என கூறினால் எதிர்ப்புகள் வருகிறது. நாம் தமிழர் கட்சியின் கொள்கை தமிழ் தேசம் என்பதாகும். எங்களுக்கு மொழி கொள்கையிலும் முரண்பாடுகள் உள்ளன. மாநில மொழிகள் தான் தாய்மொழியாக இருக்க வேண்டும். இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டதால் ஆங்கிலம் இணைப்பு மொழியாக தேவைப்படுகிறது. தேவையெனில் ஒரு மொழியை கற்றுக் கொள்ளலாம். ஆனால் அம்மொழி கொள்கையாக மாறாது.

விஜய்யை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழர் நலன் சார்ந்த ஆட்சி என சொல்ல வேண்டும். அது திராவிட மாடல் ஆட்சி என சொல்லப்படுகின்றது. நான் என் கால்களை நம்பி பயணிக்கக்கூடியவன். அடுத்தவர்கள் கால்களை நம்பி பயணிக்க மாட்டேன். சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் என தெளிவாக கூறி விட்டேன். என்னுடைய அரசியல் பயணம் மிக உறுதியானதாகவும், நிலைத்ததாகவும் உள்ளது.

https://twitter.com/news7tamil/status/1850579364389544023

பெண் எப்படி இருக்க வேண்டுமென பெரியாருக்கு முன்னே வேலுநாச்சியார் வாழ்ந்து மறைந்து விட்டு சென்றுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் போல தேர்தலை தனித்தே சந்திக்கிறேன். 5 முறை தோல்விகள் கிடைத்தாலும், 6 வது முறையும் தனித்தே போட்டியிடுகிறேன். முதலமைச்சராக வருவதை விட முதலமைச்சராகி மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என நினைக்கிறேன். விஜய் அரசியலை பார்த்து எந்த அரசியல் கட்சியும் பயப்பட மாட்டார்கள். 8% வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி 36% வாக்குகளை பெற்று வெற்றி பெற முடியாதா? தமிழக வெற்றிக் கழகம் நாம் தமிழர் கட்சிக்கு எதிரி அல்ல. அண்ணனுக்கும், தம்பிக்கும் என்ன பகை இருக்க போகிறது”

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

Tags :
Advertisement