For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தவெக கல்வி விருது விழா | வெள்ளை சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்!

10:32 AM Jun 28, 2024 IST | Web Editor
தவெக கல்வி விருது விழா   வெள்ளை சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்
Advertisement

தமிழக வெற்றிக் கழகம் சார்பில்  மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா தொடங்கியது.

Advertisement

234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10, +2 பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் இன்று பரிசளிக்கிறார்.  தவெக சார்பில் 2வது ஆண்டாக நடைபெறும் இந்த கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க காலை முதலே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வருகை புரிந்து வருகிறார்கள்.

சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் முதல் கட்டமாக நடைபெறும் இந்த விழாவில் 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில்,  விழா நடைபெறும் அரங்கிற்குள் வெள்ளை சட்டையில் வந்த விஜய் நான்குநேரியில் சாதிய தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரையின் அருகில் அமர்ந்தார்.  பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.

விழா நடைபெறும் அரங்கிற்குள் செல்ஃபோன்,  பேனா,  புத்தகம் போன்றவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  கடந்த முறை நடந்த விழாவில்,  செல்ஃபி எடுப்பது, ஆட்டோகிராஃப் வாங்குவது போன்ற செயல்கள் அரங்கேறியதால் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே,  தவெக கட்சியை தொடங்கிய பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதால், அவர் என்ன பேசுவார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இதற்காக, காலையிலே முதல் ஆளாக விஜய் திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபம் வந்துள்ளார்.

Tags :
Advertisement