சிறுமி கொலை வழக்கில் கைதான தஷ்வந்த், தாயை கொன்ற வழக்கில் விடுவிப்பு!
சென்னை மாங்காடு பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைதான தஷ்வந்த், ஜாமினில் வெளிவந்த போது தனது தாயை கொலை செய்தார். தந்தை அளித்த புகாரின் பேரில் இந்த கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் தஷ்வந்தை விடுதலை செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தந்தை பிழற்சாட்சியாக மாறியதால் போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆறு வயது சிறுமி கொலை வழக்கில், தஷ்வந்த்க்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை, உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்ய, மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருக்கும் தஷ்வந்த், தனது தாய் கொலை வழக்கில் குற்றவாளி இல்லை என செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.