For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தர்ஷன் சார் எனக்கு குரு... அவர் இப்படி ஒரு வழக்கில் சிக்கியிருப்பதை நம்ப முடியவில்லை – நடிகை ரசிதா ராம்

02:35 PM Jun 19, 2024 IST | Web Editor
தர்ஷன் சார் எனக்கு குரு    அவர் இப்படி ஒரு வழக்கில் சிக்கியிருப்பதை நம்ப முடியவில்லை – நடிகை ரசிதா ராம்
Advertisement

சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டதையடுத்து,  நடிகை ரசிதா ராம் முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். 

Advertisement

கன்னட நடிகரும்,  கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான தர்ஷன் சிறையில் உள்ள நிலையில்,  அவரது மேலாளர் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தர்ஷனின் பண்ணை வீட்டில் ஸ்ரீதரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தத்தில் உள்ளதால் தற்கொலை செய்துகொண்டதாக அவர் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.  தனது குடும்பத்தினர் யாரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் என்று வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இந்நிலையில், ஸ்ரீதரின் தற்கொலைக்கும்,  தர்ஷன் மற்றும் அவரது கும்பலால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும், ரேணுகாசாமியின் கொலை வழக்குக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என போலீஸார் தேடி வருகின்றனர்.

அதன்படி,  பெங்களூரு போலீசார் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடந்த  ஜூன் 9 அன்று கொலை செய்யப்பட்ட 33 வயதான ரேணுகாசுவாமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில்,  அவரது தலை, வயிறு மற்றும் மார்புப் பகுதி உட்பட அவரது உடல் முழுவதும் 15 கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ,  இந்நிலையில், தர்ஷனுடன் பல படங்களில் நடித்துள்ள நடிகை ரசிதா ராம்  முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை ரசிதா ராம் பகிர்ந்துள்ளார்.

அதில்,  இந்தக் குறிப்பை நான் ஒரு நடிகையாக எழுதவில்லை,  ஒரு சாதாரண குடிமகனாக எழுதுகிறேன்.  சமீபத்திய வழக்கு பற்றி என் பேச்சு...! முதலில் ரேணுகாசுவாமியின் ஆன்மா சாந்தியடையவும்,  அவரது குடும்பத்தினர் வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்.  இந்த கொலைக்கு சட்டரீதியான நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.

என்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தர்ஷன் சார் எனக்கு குரு போன்றவர்.  என் வாழ்க்கையின் தவறுகளை களைய வழிகாட்டிய ஒருவர் இப்படிப்பட்ட வழக்கில் சிக்கியிருக்கிறார் என்றால் நம்புவது சற்று கடினம்.  போலீஸ் விசாரணை மூலம் உண்மை நம்முன் வரும் என்று நம்புகிறேன். என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement