For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தங்கல் பட நடிகை உயிரிழப்பு | காரணம் என்ன?

12:41 PM Feb 18, 2024 IST | Web Editor
தங்கல் பட நடிகை உயிரிழப்பு    காரணம் என்ன
Advertisement

ஆமீர் கானின் தங்கல் படத்தில் நடித்த சுஹானி பட்னாகர் உடல்நலக் குறைவால் 19 வயதில் உயிரிழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

2016-ம் ஆண்டு நிதிஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் மல்யுத்தத்தை கதைக்களமாக கொண்டு வெளியான திரைப்படம் 'தங்கல்'. இத்திரைப்படம் இந்தி, தமிழ் உட்பட உலகத்தில் உள்ள பல மொழிகளிலும் வெளியாகி, உலகளவில் 2000 கோடி பாக் ஆஃபிஸ் கலெக்சனுடன் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக சாதனை படைத்தது.

அந்த திரைப்படத்தில் பல திரைப்பட கலைஞர்கள் நடித்திருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திடமான காட்சியமைப்பை இயக்குநர் உருவாக்கியிருந்தார். அந்த வகையில் மஹாவீர் சிங் கதாபாத்திரத்தில் நடித்த அமீர்கானின் இரண்டு மகள்களும் சிறப்பான கதையமைப்பை கொண்டிருந்தனர். அதில் இரண்டாவது மகளாக வலம் வந்த பபிதா குமாரி கதாபாத்திரமும் எல்லோரின் கவனத்தையும் பெற்றிருந்தது.

பபிதா குமாரியின் சிறுவயது கதாபாத்திரத்தில் கலக்கியிருந்த சுஹானி பட்நாகர் (19), உடல்நலக்குறைவால் காலமாகியிருப்பது ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தங்கல் திரைப்படத்தால் நல்ல புகழ் கிடைத்திருந்தாலும், தன்னுடைய கல்வி படிப்பிற்காக திரைப்படத்தில் நடிப்பதிலிருந்தும், சமூக ஊடகங்களில் இருந்தும் விலகியிருந்துள்ளார் சுஹானி.

அவருடைய மரணத்திற்கான காரணம் குறித்த உறுதியான தகவல் தெரியவில்லை, ஆனால் அவர் டெர்மடோமயோசிடிஸ் எனப்படும் தசை பலவீனம் மற்றும் தோல் வெடிப்பு அழற்சி நோய் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

Advertisement