For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#TrainCancelled | டானா புயல் எதிரொலி... 28 ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

08:35 PM Oct 22, 2024 IST | Web Editor
 traincancelled   டானா புயல் எதிரொலி    28 ரயில்கள் ரத்து   தெற்கு ரயில்வே அறிவிப்பு
Advertisement

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் 11 ரயில்கள் உட்பட 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று (அக்.21) காலை மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, மேற்கு – வடமேற்கு திசையில் நகா்ந்து, இன்று (அக்.22) மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (அக்.23) புயலாக மாறும். இந்தப் புயலுக்கு ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகா்ந்து, நாளை மறுநாள் (அக்.24) வடமேற்கு வங்கக் கடலில் ஒடிசாவின் புரி – மேற்கு வங்கத்தின் சாகர் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்களும், சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து மேற்கு வங்கத்திற்கு இயக்கப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம்:

அக்டோபர் 23 ரத்து செய்யப்பட்ட ரயில்கள் :

  • ரயில் எண் : 22503 – கன்னியாகுமரி – திப்ருகார் விரைவு ரயில்
  • ரயில் எண் : 12514 – சில்சார் – செகந்திராபாத் விரைவு ரயில்
  • ரயில் எண் : 17016 – செகந்திராபாத் – புவனேஷ்வர் விஷாகா விரைவு ரயில்
  • ரயில் எண் :. 12840 – எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் – ஹவுரா மெயில் விரைவு ரயில
  • ரயில் எண் : 12868 – புதுச்சேரி – ஹவுரா விரைவு ரயில்
  • ரயில் எண் : 22826 – எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் – ஷாலிமர் விரைவு ரயில்
  • ரயில் எண் : 12897 – புதுச்சேரி – புவனேஷ்வர் விரைவு ரயில்
  • ரயில் எண் : 18464 – கே.எஸ்.ஆர். பெங்களூர் – புவனேஷ்வர் பிரஷாந்தி விரைவு ரயில்
  • ரயில் எண் : 11019 – சி.எஸ்.சி. மும்பை – புவனேஷ்வர் கோனார்க் விரைவு ரயில்
  • ரயில் எண் : 12509 – எஸ்.எம்.வி. பெங்களூர் – கெளஹாத்தி விரைவு ரயில்
  • ரயில் எண் : 18046 ஐதராபாத் – ஹவுரா EAST COAST விரைவு ரயில்
  • ரயில் எண் : 12704 – செகந்தராபாத் – ஹெவுரா Falaknuma விரைவு ரயில்
  • ரயில் எண் : 22888 – SMVT பெங்களூர் – ஹெவுரா Humsafar விரைவு ரயில்
  • ரயில் எண் : 12864 – SMVT பெங்களூர்- ஹவுரா அதிவிரைவு ரயில்
  • ரயில் எண் : 22606 – திருநெல்வேலி – புருலியா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்

அக்டோபர் 24 ரத்து செய்யப்பட்ட ரயில்கள் :

  • ரயில் எண் : 22603 – 14.05 மணிக்குப் புறப்பட இருந்த காரக்பூர் – விழுப்புரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
  • ரயில் எண் :22851 – 14.50 மணிக்கு புறப்பட இருந்த – சந்த்ராகாச்சி – மங்களூரு விவேக் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
  • ரயில் எண் :12841 – 15. 20 மணிக்கு புறப்பட இருந்த ஷாலிமார் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
  • ரயில் எண் : 12663 – 17.40 மணிக்கு புறப்பட இருந்த ஹவுரா திருச்சிராப்பள்ளி அதிவிரைவு எக்ஸ்பிரஸ்
  • ரயில் எண் : 12863 – 22.50 மணிக்கு புறப்பட இருந்த ஹவுரா SMVT பெங்களூரு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
  • ரயில் எண் : 12839 – 23.55 மணிக்கு புறப்பட இருந்த ஹவுரா – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் மெயில்
  • ரயில் எண் : 22644 – 14.00 மணிக்கு புறப்பட இருந்த பாட்னா எர்ணாகுளம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்
  • ரயில் எண் : 06090 – 23.40 மணிக்கு புறப்பட இருந்த சந்த்ராகாச்சி – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்.
  • ரயில் எண் : 12842 – 7.00 மணிக்கு புறப்பட இருந்த ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
  • ரயில் எண் : 22808 – 08.10 மணிக்கு புறப்பட இருந்த டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சாந்த்ராகாச்சி ஏசி எக்ஸ்பிரஸ்
  • ரயில் எண் : 15227 – 00.30 மணிக்கு புறப்பட இருந்த SMVT பெங்களூரு – முசாபர்பூர் எக்ஸ்பிரஸ்
  • ரயில் எண் : 06095 -13.00 மணிக்கு புறப்பட இருந்த தாம்பரம் சந்த்ராகாச்சி சிறப்பு ரயில்
  • ரயில் எண். 12246 – 11.20 மணிக்கு புறப்பட இருந்த SMVT பெங்களூரு – ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ்
  • ரயில் எண்: 06087- 01.50 மணிக்கு புறப்பட இருந்த திருநெல்வேலி – ஷாலிமார் எக்ஸ்பிரஸ்
Tags :
Advertisement