செபி முன்னாள் தலைவர் தாமோதரனுக்கு ரூ.206 கோடி அபராதம்!
ஒப்பந்த விதிகளை மீறியதற்காக செபியின் முன்னாள் தலைவர் தமோதரனுக்கு ஐசிசியின் நடுவர் நீதிமன்றம் ரூ. 206 கோடி அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவை தளமாக கொண்ட குளோக்கல் ஹெல்த்கேர் சிஸ்டம்ஸின் பங்குதார்ராக இருந்தார் செபியின் முன்னாள் தலைவர் தமோதரன். UpHealth மற்றும் Glocal Healthcare அமைப்புகள் தொடர்பான சர்ச்சையில் இவருக்கு ரூ. 206 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, குளோகல் ஹெல்த்கேர், அதன் விளம்பரதாரர்கள், முக்கிய பங்குதாரர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு எதிராக ஐசிசியின் நடுவர் நீதிமன்றம் கிட்டத்தட்ட ரூ.920 கோடி ($110.2 மில்லியன்) நஷ்டஈடு விதித்துள்ளது.
குளோக்கல் ஹெல்த்கேர் சிஸ்டம்ஸ் கொல்கத்தாவில் மருத்துவமனையாக செயல்படுகிறது. இந்த மருத்துவமனை இருதயவியல், எலும்பியல், கண் மருத்துவம், மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம், வெளி நோயாளி, நர்சிங் மற்றும் வலி மேலாண்மை சேவைகளை வழங்குகிறது. இதன் ஒப்பந்த கொள்கைகளை மீறியதற்காக நஷ்ட ஈடு விதிக்கப்பட்டுள்ளது.