For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#D52 | தனுஷின் 52-வது படம்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

04:36 PM Sep 17, 2024 IST | Web Editor
 d52   தனுஷின் 52 வது படம்… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
Advertisement

நடிகர் தனுஷின் 52-வது படம் குறித்த அதிகாரபூர்வமாக அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Advertisement

கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த ‘பா. பாண்டி’ திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது உருவான திரைப்படம் ‘ராயன்’. இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். தனுஷின் 50-வது படமாக உருவாகிய ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்திருந்தனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஜுலை மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

https://twitter.com/DawnPicturesOff/status/1835919074687168757

இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தனுஷ் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனுஷ் 52வது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தினையும் தனுஷ் தயாரிக்கிறார். தனுசுடன் இணைந்து டாவ்ன் பிக்சர்சும் இந்த படத்தை தயாரிக்கிறது. தனுஷின் 52வது படத்தை தயாரிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாவ்ன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநர் மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement