For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியானது ‘D50’ திரைப்பட டைட்டில் மற்றும் போஸ்டர்!

08:35 PM Feb 19, 2024 IST | Web Editor
வெளியானது ‘d50’ திரைப்பட டைட்டில் மற்றும் போஸ்டர்
Advertisement

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘D50’ படத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கலன்று வெளிவந்த கேப்டன் மில்லர் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோரும் படத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘D50’ -ன் பெயர் மற்றும் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்த நிலையில் பெயர் மற்றும் போஸ்டரை தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வட சென்னையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. தனுஷ் இயக்கத்தில் முதலில் வெளிவந்த படம் பவர்பாண்டி. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் ‘D50’ தனுஷ் இயக்கத்தில் வெளிவரும் இரண்டாவது படம் ராயன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement