புதுச்சேரியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
மத்திய அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கொங்கன் கடற்கரை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடுத்து, புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் புதுச்சேரி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால், கத்திரி வெய்யில் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டுள்ளனர். இதனிடையே துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி முழுவதும் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.