For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#CyberCrimePolice என கூறி ரயில்வே உயர் அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சி!

02:12 PM Sep 03, 2024 IST | Web Editor
 cybercrimepolice என கூறி ரயில்வே உயர் அதிகாரியிடம் பணம் பறிக்க முயற்சி
Advertisement

சென்னையைச் சேர்ந்த ரயில்வே உயர் அதிகாரியிடம், சைபர் கிரைம் போலீஸ் என கூறி மர்ம நபர்கள் பணம் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

சென்னையைச் சேர்ந்தவர் ராம்பிரசாத். இவர் தெற்கு ரயில்வேயில் சீனியர் டிவிஷனல் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில், ராம்பிரசாத்தை கடந்த 2 நாட்களாக காணவில்லை என அவரின் குடும்பத்தினர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதன்பேரில், போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் ராம் பிரசாத்தை கண்டுபிடித்து தேனாம்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ராம்பிரசாத்திடம், மும்பையில் இருந்து சைபர் கிரைம் போலீசார் பேசுவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர். மர்ம நபர்கள் ராம்பிரசாத்திடம் பேசும்போது, "உங்கள் மீது பிடிவாரண்டு இருக்கிறது. நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் சிறையில் தள்ளி விடுவோம்" என மிரட்டி உள்ளனர்.

மேலும் அவர்கள், பெரியமேட்டில் நாங்கள் சொல்லும் லாட்ஜுக்கு சென்று, அறையில் இருந்தபடி எங்களிடம் வீடியோ காலில் பேச வேண்டும் எனவும் நாங்கள் உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் மிரட்டி உள்ளனர்.

இதனால், பயந்து போன ராம் பிரசாத் மோசடி கும்பல் சொன்னபடியே கடந்த 2 நாட்களாக ஒரு லாட்ஜில் தங்கி இருந்திருக்கிறார். ராம் பிரசாத் மோசடி கும்பலிடம், தன்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறியுள்ளார். ஆனால் மோசடி கும்பல் யாரிடமாவது வாங்கி அனுப்ப வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த நிலையில் அவர் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement