For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சுயமரியாதையைவிட முக்கியமானது வேறு எதுவுமில்லை!" - #CWC ஷோவில் இருந்து மணிமேகலை விலகல்!

03:54 PM Sep 15, 2024 IST | Web Editor
 சுயமரியாதையைவிட முக்கியமானது வேறு எதுவுமில்லை      cwc ஷோவில் இருந்து மணிமேகலை விலகல்
Advertisement

பெண் தொகுப்பாளினி உடன் ஏற்பட்ட பிரச்னைக் காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்துள்ளார்.

Advertisement

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பட்டு வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த புதிய சீசனில் சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன் நடுவர்களாக பங்கேற்று உள்ளனர். ரக்‌ஷன் மற்றும் மணிமேகலை ஆகியோர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில், தொகுப்பாளினி மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக மணிமேகலை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :

"குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன். நான் என்னுடைய 100% கடின உழைப்பையும், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பையும் இந்நிகழ்ச்சிக்காக கொடுத்து வந்தேன். ஆனால் சுயமரியாதையைவிட முக்கியம்மானது வேறு எதுவுமில்லை. நான் அதை வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் கடைபிடித்து வருகிறேன். புகழ், பணம், வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும், சுயமரியாதை என்று வரும்போது மற்றதெல்லாம் எனக்கு இரண்டாம்பட்சம்தான்.

இதையும் படியுங்கள் : Uttarakhand – நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழக சுற்றுலாப்பயணிகள்! 15 பேர் மீட்பு!

அதனால்தான் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். இந்த சீசன் முழுவதும் தொகுப்பாளினி ஒருவர், அவர் சமையல் கலைஞர் என்பதை மறந்து, தொகுப்பாளர் வேலையை செய்யவிடாமல் தடுப்பதும், எனது வேலையில் ஆதிக்கம் செலுத்துவதும், எனது வேலையில் குறுக்கீடு செய்வதுமாக இருந்து வந்தார். நான் தொகுப்பாளராக 15 ஆண்டுகளாக இருக்கிறேன். ஏற்ற, இறக்கங்கள் வரும், ஆனால், இதுபோன்று முதிர்ச்சியற்றவாறு நடந்துகொள்வதை என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்தது இல்லை. எனக்கு இதை செய்த நபருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்களைத் துன்பப்படுத்தாமல் இருக்க, கடவுள் அவருக்கு நிறைய நிகழ்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கட்டும். அனைவருக்கும் நன்றி" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மணிமேகலை யாரை குற்றம் சாட்டியுள்ளார் என்பது இணையத்தில் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

Tags :
Advertisement