For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#CSKvRCB : டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங் தேர்வு!

08:06 PM Mar 22, 2024 IST | Web Editor
 cskvrcb   டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங் தேர்வு
Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024-ன் முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் ஆர்சிபி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Advertisement

17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச் 22) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர் இசையுடன் இன்றைய ஆட்டம் தொடங்கியது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல்-ன் முதல் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணியில் இதுவரை கேப்டனாக இருந்த தோனி இந்த போட்டியில் வீரராகவும், அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரேயொரு போட்டி மட்டும் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டது. 

அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 8 போட்டிகளில்  விளையாடியுள்ளது. இதில் சென்னை 7 போட்டிகளிலும், பெங்களூரு 1 போட்டியிலும் வென்றுள்ளது. இதனால் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆவல் அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. 

இரு அணிகளும் கடந்த சீசனில் இரு அணிகளும் ஒருமுறை மட்டுமே மோதிக்கொண்டது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை நேரில் காண சென்னை மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், இந்தியாவின் பல நகரங்களில் இருந்தும், உலகின் பல நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்துள்ளனர்.

Tags :
Advertisement