For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

CSK vs PBKS அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்.29-ல் தொடங்குகிறது!

08:08 PM Apr 27, 2024 IST | Web Editor
csk vs pbks அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப் 29 ல் தொடங்குகிறது
Advertisement

CSK vs PBKS அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்.29-ல் தொடங்க உள்ளது.

Advertisement

டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள் : “ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன்!” – ஓய்எஸ்ஆர் காங். தேர்தல் அறிக்கை வெளியீடு!

இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் டெல்லி  கேபிடல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இதையடுத்து, இரண்டாவது போட்டியில் லக்னோவில் உள்ள ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் இன்று மாலை 7.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், லக்னோ சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாட உள்ளன.

இதையடுத்து, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்  மே 01 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை, வரும் 29ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்.29ம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ்  அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement