சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவான் கான்வே காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின்போது இடது கை கட்டை விரலில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. காயத்திலிருந்து குணமடைந்து அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : “வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு இருக்கவேண்டும்!” – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
டெவான் கான்வேவுக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ரிச்சர்டு க்ளீசன் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை ரூ. 50 லட்சத்துக்கு சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது. ரிச்சர்டு க்ளீசன் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார்.
36 வயதாகும் ரிச்சர்டு க்ளீசன் இங்கிலாந்து அணிக்காக ஆறு டி20 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான அவரது அறிமுக டி20 போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை வீழ்த்தினார். வலது கை வேகப் பந்துவீச்சாளரான அவர் டி20 போட்டிகளில் இதுவரை 100க்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
Welcoming with a glee!🤩🥳
Whistle Vanakkam, Richard! 🦁💛
🔗 - https://t.co/7XCuEZCm21 #WhistlePodu #Yellove pic.twitter.com/rJa1HilaQ6— Chennai Super Kings (@ChennaiIPL) April 18, 2024