கரூர் விஜய் பிரசாரத்தில் கூட்டநெரிசல் - பத்திற்கும் மேற்பட்டோர் மயக்கம் என தகவல்..!
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் விஜய் பரப்புரையின் பொழுது 10க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளனர்
08:57 PM Sep 27, 2025 IST | Web Editor
Advertisement
தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று அவர் கரூரில் உள்ள வேலுச்சாமிபுரம் பகுதியில் பகுதியில் மக்களை சந்தித்தார்.
Advertisement
அப்போது விஜய் பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தில் சிலர் அருகில் இருந்த கூரைகள் மற்றும் மின் மோட்டார் கம்பங்கள் அனைத்திலும் இளைஞர்கள் ஏறத் தொடங்கினர், இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். இதனால் விஜய் பேச்சை இடையில் முடித்துக்கொண்டார்.
மேலும் மயக்கமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது