For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

05:07 PM Jun 02, 2024 IST | Web Editor
கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம்   புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயருக்கும், ஸ்ருதி ரகுநாதனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. 

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூலம் பிரபலமடைந்து இந்திய அணியில் இடம் பெற்றவர் வெங்கடேஷ் ஐயர். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடினார். அந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடிய இவர், 370 ரன்கள் குவித்து கவனம் ஈர்த்தார். இதில் 37 பவுண்டரி, 14 சிக்ஸர்கள் அடங்கும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெங்கடேஷ் ஐயருக்கும், ஸ்ருதி ரகுநாதனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தினார்.இந்நிலையில் வெங்கடேஷ் ஐயருக்கும், ஸ்ருதி ரகுநாதனுக்கும் இன்று பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. வெங்கடேஷ் ஐயர் - ஸ்ருதி ரகுநாதன் திருமண புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ரகுநாதன் இந்தியாவின் NIFT-ல் ஃபேஷன் மேனேஜ்மென்ட்டில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் படித்து முடித்துள்ளார். தற்போது பெங்களூருவில் உள்ள லைஃப் ஸ்டைல் ​​இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

Tags :
Advertisement