For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 வது முறையாக நீட்டிப்பு!

07:56 PM Jun 14, 2024 IST | Web Editor
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 வது முறையாக நீட்டிப்பு
Advertisement

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 39 வது முறையாக
நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர்
செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான அசல் வங்கி ஆவணங்களை வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், நீதிமன்ற உத்தரவுப்படி அசல் செலான்களை ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட வேண்டுமெனவும் அதுவரை அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டுமென கோரியிருந்தார்.

மேலும், கடந்த 2012 முதல் 2022 வரை சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக
கூறப்படும் காலத்தில் சிட்டி யூனியன் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கிகளில்
பணிபுரிந்த ஊழியர்களின் விவரங்களை வழங்க கோரியும், 2016 முதல் 2022 வரையிலான
காலகட்டத்தில் செந்தில்பாலாஜி மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் டெபாசிட்
செய்தவர்களின் பான் கார்டு விவரங்களையும் தெரிவிக்க வங்கி அதிகாரிகளுக்கு
உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத்துறையால் தங்களுக்கு வழங்கபட்ட ஆவணங்களில் ஒரு சில ஆவணங்கள் திருத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத்துறை தரப்பில், வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நிலையில்,
ஆவணங்களைக் வழங்க கோரி மனுக்களை தாக்கல் செய்ய முடியாது என்பதால், இந்த
மனுக்கள் விசாரணைக்கு உகந்தல்ல என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வங்கி ஆவணங்களை வழங்க உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு ஜூன் 19-ம் தேதி பிறப்பிக்கப்படும் என
அறிவித்துள்ளார். இதன் காரணமாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 வது
முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement