For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வாக்கு எண்ணிக்கை - தமிழ்நாட்டிற்கு 2 நோடல் அதிகாரிகள் நியமனம்!

06:50 PM Jun 02, 2024 IST | Web Editor
வாக்கு எண்ணிக்கை   தமிழ்நாட்டிற்கு 2 நோடல் அதிகாரிகள் நியமனம்
Advertisement

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு நியமனம் செய்யப்பட்ட பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க 2 நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.   

Advertisement

இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 -ம் தேதி வரை 7 கட்டங்களாக வெவ்வேறு நாட்களில் நடந்து முடிந்தது. நேற்று (ஜூன் 1) மாலை 6 மணியுடன் இறுதிகட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையடுத்து, பல்வேறு செய்தி ஊடகங்கள்/நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வரும் ஜுன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  இந்நிலையில்,  தமிழ்நாட்டிற்கு நியமனம் செய்யப்பட்ட பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க 2 நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி,  கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் ஆனி ஜோசப்,  பொதுத் துறை செயலாளர் நந்தகுமார் ஆகியோர் நோடல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் இருவரும் பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement