அதானி குழுமம் மீது ஊழல் புகார்: ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு SEBI நோட்டீஸ்!
அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி (SEBI) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது.
மேலும், பங்கு மதிப்பில் உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றது, பங்குச் சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டது, அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இதையும் படியுங்கள் :தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள்: 5 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இதனால், இந்த விவகரம் தொடர்பாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியும் விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் தாமதப்படுத்துவதாக செபி மீது குற்றச்சாட்டு எழுப்பட்டது. மூன்று மாதங்களில் செபி விசாரணையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், செபி அமைப்பு 46 பக்கங்கள் கொண்ட கேள்விகளை ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸை அனுப்பியுள்ளது.